23 Jan 2016

நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக மட்டு மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் - அமைச்சின் ஆலோசகர் சோ.கணேசமூர்த்தி.

SHARE
(இ.சுதா)

நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கட்சி வேறுபாடுகளை மறந்து அபிவிருத்தியினை நோக்கியதாக எமது இலக்கு அமைய வேண்டும்.கடந்த கால யுத்தம் தமிழர் வாழ்வில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து  மீள்வதற்கான சந்தர்ப்பம் தற்போது அதற்கு ஏற்றவகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் அப்போதுதான் அபிவிருத்தி காண முடியாத விடயங்களில் அபிவிருத்தியினை இலக்கினை அடைய முடியும்.
இவ்வாறு துறைநீலாவணை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே முன்னாள் பிரதி அமைச்சரும் தந்போதைய வர்த்த     வணிகத் துறை அமைச்சின்; ஆலோசகர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு சென்றிருக்கின்றேன் ஆனால் துறைநீலாவணைக் கிராம மக்களின் வரவேற்பினை மறக்க முடியாது. 2004 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பிரதி அமைச்சராக இருந்த காலம் குறுகியதாக இருந்தாலும் அக்கால கட்டத்தினை முழுமையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பயன் படுத்தினேன் அதற்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன.மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழங்குடா பிரதேசத்தில் கல்விக் கல்லூரியினை நிறுவுவதற்கு முயன்ற போது மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக இருந்தனர்.அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டு இன்று பிரமாண்டமான தேசியக் கல்விக் கல்லூரி நிறுவப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ளன.இவ்வாறு பல விடயங்களில் எனது பணி தொடந்தன.

இன்று துறைநீலாவணைக் கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்  அத்துடன் பிரதான வீதிகள் எதுவிதமான புனரமைப்புக்களும் இல்லாத நிலையில் காணப்படுகின்றமை வேதனை தரக்கூடிய விடயமாகும்.வீரபுருசர்கள் வாழ்கின்ற இக்கிராமம் நல்லாட்சியில் அபிவிருத்தி இலக்கினை அடைய வேண்டும்.பொய் வார்த்தைகளை மக்கள் மத்தியில் விதைப்பவர்கள் இன்றும் அரசியல் புரிகின்றனர்.அவர்களினால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் இவ்வாறான நிலை மாற்றப்பட வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி பிரதமர் அமைச்சுக்களுடன் கலந்துரையாடி பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளளன குறிப்பாக வீடமைப்பு வசதிகள் இபோகு;குவரத்து வசதிகள் இவேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.





SHARE

Author: verified_user

0 Comments: