10 Jan 2016

தேர்தலுக்குரிய அறிவித்தல்கள் விடுக்கப்பட்டதன் பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் - தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்.

SHARE
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான அறிவித்தல்கள் இதுவரை வெளியிடப் படவில்லை, அதற்கு சுமார் 6 மாதங்கள் செல்லும், தேர்தலுக்குரிய அறிவித்தல்கள் விடுக்கப்பட்டதன் பின்னரே எமது முடிவுகள் வெளியிடப்படும்.
என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண விவாய கால்நடை அபிவிருத்தி அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

எதிர் வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக இன்று ஞாயிற்றுக் கிழமை (10) தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

எனவே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திக்கும், தமக்கும் தொடர்பு இல்லை எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: