நாம் இலங்கையர்கள் என்கின்ற எண்ணத்தை எப்போதும் மறவோம். ஆனால் எங்களுடைய மொழியையும் எங்களுடைய மதத்தையும் எமது கலாச்சாரத்தையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும் அதற்கு சமஷ்டி அரசியற் தீர்வே அவசியம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கதிரவெளி புச்சாக்கேணி வயல்விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதன் பின்னர் பிரதேச மக்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான வருடம் எங்களுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காகத் தற்போது நாடாளுமன்றம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. என்றாலும் கூட முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஸ இன்னும் அடிப்பட்ட பாம்பாக இருந்து கொண்டு புதிய அரசிலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் விருப்பம் இல்லாமல் அவர் அரசியலமைப்பைத் திருத்த வேண்டும் அந்தளவே போதும் என்கின்றார். துற்போதைய ஜனாதிபதி கூறுகின்றார் புதியதொரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று.
ஏனெனில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டால் தான் தமிழர்களுக்கான உரிமைகளை அங்கு நாம் உட்புகுத்தலாம். தமிழர்களுக்கான உரிமை எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாங்கள் எமது கட்சி தொடங்கிய காலம் தொட்டு சொல்லிக் கொண்டு வருகின்றோம் இப்போது நாங்கள் எங்களுடைய தமிழ்த் தரப்பில் இருந்து சமஷ்;டி என்கின்ற கூட்டாட்சியைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
இந்தியாவில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மாநிலங்கள் கொடுக்கப்பட்டு ஆட்சி நடத்துகின்றார்கள் இங்கு இலங்கையில் நாங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு மாநிலம் தாருங்கள் என்று கேட்டால் அதனை அவர்கள் மறுக்கின்றார்கள். ஏனெனில் எமக்கு ஒரு மாநிலம் வழங்கப்பட்டால் நாம் இந்தியாவின் தமிழ் நாட்டுடன் சேர்ந்து விடுவோம் என தவறாகச் சிந்திக்கின்றார்கள் போலும். ஆனால் நாம் இலங்கையர்கள் என்கின்ற எண்ணத்தை எப்போதும் மறவோம். ஆனால் எங்களுடைய மொழியையும் எங்களுடைய மதத்தையும் எமது கலாச்சாரத்தையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
சிங்கள கலாச்சாரத்துடன் இணைந்து எமது கலாச்சாரங்கள் மழுங்கிச் செல்லும் காலம் வந்தால் நாம் என்ன செய்வது. பௌத்த துறவிகள் வந்து எமது கலாச்சார வைபவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று சொன்னால் நாங்கள் என்ன செய்வது அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா இல்லை. நாங்கள் எமது கலாச்சாரங்களை பாதுகாக்க வேண்டும் இதற்காக சமஷ்;டி அடிப்படையிலான தீர்வு அவசியம்.
ஆனால் அவர்கள் சொல்லுகின்றார்கள் ஒற்றையாட்சி என்று அதாவது அனைத்தும் அங்கே இருக்கும் தேவைப்பட்டால் எமக்கு தரப்படும் என்கின்ற முறையிலான ஆட்சி. இது சாத்தியப்படாத விடயம் தூரத்து தண்ணீர் ஆபத்துக்கு உதவாது என்று ஒரு பழமொழி இருக்கின்றது அது போலதான் இருக்கும். நாம் எமக்கு தேவையானதை எமது வளத்தில் இருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் முடித்தால் அவரவர்க்கு உரியவற்றை அவரவர்க்குக் கொடுத்து அவர்களை தனிக் குடும்பமாக அனுப்பிவிட வேண்டும் அவர்களை பெற்றோர்கள் பராமரிப்பில் இருத்தினால் பிரச்சினை தான் தோன்றும், ஒரு பெரிய பானையில் சமைத்து அவர்களுக்குத் தேவையானதைக் எடுத்து விட்டு மீதியை எமக்கு தருவது தான் அவர்கள் கூறும் ஒற்றையாட்சி ஆனால் நாம் அதனைக் கேட்கவில்லை எமக்கு அனைத்தையும் தாருங்கள் எமக்குத் தேவையானதை நாமே சமைத்து உண்கின்றோம் என்கிறோம் அது தான் சஷ்ட்;டி.
முன்பெல்லாம் நாங்கள் ஒன்றாக இருப்பதற்குத் தான் ஆசைப்பட்டோம் ஆனால் அதற்கேற்றாற் போல் அதிகளவில் நெருக்குவாரப் பட்டமையால் தான் தனித்து இருக்க நினைக்கின்றோம். அதிலும் நாம் பிரிந்து செல்ல நினைக்கவில்லை சம~;டி தீர்வினையே கேட்கின்றோம்.
இந்த அரசியல் என்பது பெரிய விடயம் அல்ல அவரவர் அவரவர் இடத்தில் இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை இதுதான் நாங்கள் சொல்லும் சம~;டி இதற்காகத் தான் இப்போது ஆரம்ப கட்ட நிலைமைகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன.
கடந்த காலங்களில் காணாமற் போனோர் சம்மந்தமான ஆணைக் குழுக்கள் வந்ததைப் போன்று அரசியற் திருத்தம் சம்மந்தமான ஆணைக்குழுவும் வரப்போகின்றது. அப்போது எமது மக்கள் ஒருமித்து அரசியல் பற்றிய தெளிவுடன் அவர்களுக்கு எமது நிலைமைகளைத் தெரிவிக்க வேண்டும்.
சமஷ்;டி என்றால் என்னவென்று எங்களுடைய மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான அறிவூட்டல்களையும் நாம் தொடர்ந்து மேற்கொள்வோம். எமது மக்களின் மனங்களில் எல்லாம் இருக்க வேண்டியது இதுதான் எமக்கு சமஷ்;டி என்கின்ற கூட்டாட்சி வேண்டும். மற்றையது வடக்கும் கிழக்கும் இணைக்க்பட வேண்டும். ஏனெனில எமக்கு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் இருக்கின்றது அப்போதுதான் நாம் எமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இதில் இன்னுமொரு விடயம் இருக்கின்றது எமது சகோதர இனமான முஸ்லீம் சகோதரர்கள் அவர்களையும் இது தொடர்பில் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். ஏனெனில் இந்த அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பிற்கு விடப்படும் அதற்கு எமது தரப்பு மாத்திரம் தனித்து செயற்படுவது சரிவராது ஜனாதிபதி தேர்தலின் போது நாம் அனைவரும் ஒருமித்து எவ்வாறு செயற்பட்டோமோ அதே போன்று கூடுதலானவர்கள் வாக்களிக்க வேண்டும். எனவே அனைவரையும் சேர்த்து செயற்பட வேண்டும்.
நாம் தூரத்தில் தூரத்தில் இருந்தமையால் தான் பிரச்சினைகள் ஏற்பட்டது. இப்போது அருகில் வந்திருக்கின்றோம். எனவே இப்படியான விடயங்கள் எல்லாம் இருக்கின்றது இதனை எமது மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment