14 Jan 2016

கொழும்பில் நியமிக்கப் பட்டுள்ள கிழக்கு மாகாண பட்டதாரி பயிலுனர்களை கிழக்கிற்கு மீளப்பெறுமாறு துரைரெத்தினம் முதலமைச்சரிடம் வேண்டுகோள்.

SHARE
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பலருக்கு பட்டதாரி பயிலுனர்கள் பதவி வழங்கப்பட்டு 10000 ரூபாய் வேதனத்திற்கு கொழும்பில் கடமைபுரிவதற்காக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு 10000 ரூபாய் வேதனத்திற்கு கிழக்கிலிருந்து கொழும்பிற்குச் சென்று கடமை புரிவதானது
மிகவும் கடினமாகதொன்றாகும். எனவே கொழும்பில் கடமைக்காக அமர்த்தப்பட்டுள்ள  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரி பயிலுனர்கள் அனைவரையும், கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுவதற்கு அவர்களை மீளப் பெறுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டிடம் புதன் கிழமை மாலை (14) கோரிக்கை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வெள்ளிக்கிழமை (14) தெரிவித்துள்ளார்.

12.01.2016 அன்று கொழும்பில் வைத்து 31.03.2012 இற்கு முன்னர் பட்டப்படிப்பை முடித்துக் nhகண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த 268 பட்டதாரிகளும், கிழக்கு மாகாணத்தில் 500 இற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கும், இவ்வாறு கொழும்பில் பட்டதாரி பயிலுனர்களாகக் கடமையாற்றுவதற்கு பொது நிருவாக அமைச்சினால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், இவ்விடையம் தொடர்பில் உரிய நடவடிக்கை ஏடுப்பதாகவும், கிழக்கு மகாண முதலமைசர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,  கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் விபரங்களைத் திரட்டுமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளரைப் பணித்துள்ளதாகவும், முதலமைசர் பணித்துள்ளமாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: