நவமணி தமிழ் பத்திரிகை மீதான தாக்குதல் முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றேன். இது ஜனநாயகத்தின் மீது எறியப்படுகின்ற கல்லாகும் பத்திரிகைத்துறை வரலாற்றில் மிகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் இயங்கி சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைக்குரலாக செயற்படுகின்ற நவமணி தமிழ் பத்திரிகையானது சிறுபான்மை சமூகத்தின் சொத்தாகும் எனகிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்
கடந்த சனிக்கிழமை இரவு நவமணி பத்திரிகைக் காரியாலயம் தாக்கப்பட்டது தொடர்பில் வெளியிடப் படுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது…
கடந்த ஆட்சியினைப் போல ஊடகத்துறையின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான செயற்பாடுகளை இந்த நல்லாட்சி அனுமதிக்காது ஊடகத்துறையினருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது ஊடகத்துறையினர் நிம்மதியாகவும். சுயாதீனமாகவும் இயங்கும் ஒரு ஆரோக்கியமான சூழலை இந்த நல்லாட்சி வழங்கியுள்ளது. நவமணி மீதான தாக்குதலானது நல்லாட்சியை விரும்பாத, நல்லாட்சியின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டஇ நாட்டின் அமைதி நிலையை குழப்ப முயற்சி செய்கின்ற, ஜனநாயக விரோதப் போக்குடையவர்களின் செயற்பாடாகும். இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
இந்த அருவருக்கதக்க செயற்பாட்டினை அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும், இந்த நாட்டில் ஊடகதர்மத்தை பேணிஇசிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேசுகின்றஇஎழுதுகின்ற விடயத்தில் எல்லா தமிழ் பத்திரிகைகளும் கணிசமான பங்களிப்புக்களை செய்கின்றன, அந்த பங்களிப்பை நலிவடைய செய்கின்ற ஒரு செயற்பாடாகவே இதனை நான் கருதுகிறேன்.
அத்தோடு இந்த செயற்பாடுகள் முறையிலேயே கிள்ளப்பட வேண்டும்இநவமணி பத்திரிகை காரியாலயம் போல இன்னொரு பத்திரிகைக் காரியாலயம் தாக்கப்படக்கூடாது, இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனஇபிரதமர் ரணல்விக்ரமசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment