21 Jan 2016

கட்டாக்காலி மாடுகளை அலையவிட்ட அதன் உரிமையாளர்களிடமிருந்து 8 இலட்சம் ரூபாய் அபராதமாக அறவிட்டு

SHARE
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு சட்டவிரோதமான முறையில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளை அலையவிட்ட அதன் உரிமையாளர்களிடமிருந்து 8 இலட்சம் ரூபாய் அபராதமாக அறவிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - கல்முனை வீதி பிரதான வீதி மற்றும் மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதி உட்பட மாநகர சபைக்குட்பட்ட பல வீதிகளில் அலைந்து திரிந்து வாகனப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய சுமார் 160 மாடுகள் இவ்வாறு மாநகர ஊழியர்களால் பிடிக்கப்பட்டு சட்டநடவடிக்கையின் கீழ் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக அவர் கூறினார்.
குறித்த கட்டக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  
SHARE

Author: verified_user

0 Comments: