(இ.சுதா)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பணிமனையும் பிரதேச பொலிஸாரும் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு துரித வேலைத்திட்டத்திற்காமைவாக, புதன் கிழமை (14) துறைநீலாவணைக் கிராமத்தில் இடம் பெற்றது.
இவ் வேலைத்திட்டத்தின் பிரகாரம், துறைநீலாவணைக் கிராமத்தில் உள்ள பொது இடங்கள் உட்பட சுமார் 750 வீடுகளில் டெங்குப் பரிசோதனைகள் இடம் பெற்றதுடன் டெங்கு நுளம்புகளின் ஆபத்தான தன்மை பற்றிய அறிவுறுத்தல்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பினால் ஏற்படக் கூடிய பாரிய தாக்கம் தொடர்பான விளக்கங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும், வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபுபக்கர் மேற்பார்வை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் க.திருச்செல்வம் உட்பட துறைநீலாவணைக் கிராமத்தில் சேவையாற்றுகின்ற கிராம சேவர்களான தி.கோகுலராஜ் இவை.கனகசபை, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி பிரதேசங்களில் சேவையாற்றுகின்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர் உட்பட பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப் பலரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் இணைந்திருந்தனர்.
0 Comments:
Post a Comment