14 Jan 2016

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 543 மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள்.

SHARE
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 543 மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள், இவற்றுள் முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிட்ட பலருக்கு அரசாங்கத்தினால் மாதாந்தம் 3000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றன.
என போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ந.புவநேந்திரன்  தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு, வாழ்வாதார உதவி வழங்கும் இநிகழ்வு செவ்வாய்க் கிழமை (12) போரதீவுப் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்…

அரசாங்கம் தற்போது மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு தொடர்பாக பல்வேறு செயற்றிட்டங்களை முன்நெடுத்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாக பிரதேச மட்டத்தில் ஒரு அமைப்பாகவும், மாவட்ட மாட்டத்த்தில் ஒரு அமைப்பாகவும், மாற்றுத் திறனாளிகள் சங்கள் அமைந்து அச்சங்கங்கள் ஊடாக அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்நெடுக்கப் பட்டுள்ளன. 

மாற்றுத்தி திறனாளிகள், பிறரிடத்தில் தங்கியிருக்கக் கூடிய நிலையில் உடல், உள, சமூக ரீதியாக பாதிக்கப் பட்டவர்களாகக் காணப் படுகின்றார்கள்.  இந்நிலையை மாற்றியமைத்து, அவர்களது வாழ்வை சீர்படுத்துவதற்கு அரச அதிகாரிகளும், சமூகமும், ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும். 

கடந்த யுத்தகாலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்போரதீவுப்பற்று பிரதேசத்தில், வாழ்வாதார ரீதியான செயற்பாடுகள் குறிப்பிட்ட அளவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: