11 Jan 2016

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 38 டெங்கு நேயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர். (வீடியோ)

SHARE
இன்று திங்கட் கிழமை முதல் (11) டெங்கு பரிசோதனைகளை தொடர்ந்து இப்பிரதேசத்தில் 3 தினங்களுக்கு மேற்கொள்ளவுள்ளோம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு, 38 டெங்கு நேயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர். என  மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் கே.திருச்செல்வம் தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை களுவாஞ்சிகுடியில் இன்று காலை ஆரம்பித்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

கடந்த வருடம் (2015) களுவாஞ்சிகுடி பகுதியில் 13 டெங்கு நோயாளர்களும், துறை நீலாவணைப் பகுதியில் 10 டெங்கு நோயளர்களும் இனங்காணப் பட்டுள்ள இந்நிலையில் ஏனைய பகுதிகளிலும் குறைவான அளவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் இப்பிரதேசத்தில் டெங்கு நோய் அதிகமாகக் காணப்பட்ட பகுதிகளில் டொங்கு ஒழிப்பு லேலைத்எதிட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். 

களுவாஞ்சிகுடி வடக்கு, களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம்பிரிவிலும், இன்று எமது டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துள்ளோம். என அவர் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமாரின் வழிகாட்டலின் அடிப்படையில், போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேசங்களின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர், களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிசோதகர் மஹிந்த ஹேமதிலக்க, ஒந்தாச்சிமடம் இராணுவ பொறுப்பதிகாரி கெப்டன் பி.ஆர்.சாந்த, குடும்பநல உத்தியோகஸ்தர்கள், மலேரியா தடை இயக்க பகுதியினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.















SHARE

Author: verified_user

0 Comments: