மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மதுபான சலைகளில் தினமும் காலை 9 மணிக்கு முன்னர் தலா 140 இற்கு மேற்பட்ட மதுபானப் போத்தல்கள் விற்பனையாகின்றன, ஆனால் இவ்வாறான மதுபான சலைகள் தினமும் முற்பகல் 11 மணிக்குத் திறந்து பிற்பகல் 2 மணிக்கு பூட்ட வேண்டும் என சட்டம் சொல்கின்றது. எனவே இவ்விடையத்தில் சட்டத்தை உரிய அதிகாரிகள் கடைப் பிடிக்கின்றார்கள் இல்லை, இச்செயற்பாடு மட்டு நகரில் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.
சட்டத்தை உரியமுறையில் நிலைநாட்டினால் மட்டு நகரிலுள்ள மதுபானப் பகழக்கத்தைக் குறைக்கலாம். என கிழக்கு மகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் புதன் கிழமை (13) மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பெற்றதுபோல் மதுபாவனையில் நமது மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம் உள்ளது. எனக் கூறுகின்றோம். மதுபான நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்துவதற்கு எனது பன்முகப் படுத்தப்பட்ட நிதியிலிருந்து இவ்வருடம், நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன், தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவினருடனும் இவ்விடையம் குறித்து கதைத்துள்ளேன்,
எனவே மது வரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினர் உரியமுறையில் செயற்பட வில்லையாயின் அவர்களது வேலைகளை அரசியல் வாதிகளாகிய நாங்கள் மேற்கொள்ள வேண்டும். என மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீரலி இதற்குப் பதிலழித்தார்.
0 Comments:
Post a Comment