9 Dec 2015

புளியந்தீவு மோனிங்ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள்…

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் புளியந்தீவு மோனிங் ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வும் தரம் ஒன்றுக்காக செல்லும் மாணவர்களை வழியனுப்பி வைக்கும் பிரியாவிடை நிகழ்வும் கடந்த செவ்வாய் கிழமை (08) பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி லோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புளியந்தீவு புனிதமரியாள் பேராலய உதவிப் பங்குத் தந்தை ஜெரிஸ்டன் அடிகளார், கிழக்கு மாகாணப் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணபாலர் பாடசாலைகள் ஒன்றியத்தின் தலைவர் பொன்.செல்வநாயகம், கிழக்குப் பல்கலைக் கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே.கருனாகரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலை ஆசிரியர்கள், சிறார்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சின்னஞ் சிறுசிறார்களின் அழகிய கலைநிகழ்வுகள், அதிதிகளினால் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வுகள் இடம ;பெற்றதுடன் ஒளிவிழாவின் சிறப்பம்சமான பாலன் பிறப்புக் காட்சியும் இடம்பெற்றது.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு மாகாணசபைபிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரினால் வழங்கப்பட்ட மாகாணசபை பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டின் கீழ் ரூபா 25000 பெறுமதியான பாடசாலை தளபாடங்கள் உத்தியோகபூர்வமாக பாலர் பாடசாலை பிரதம ஆசிரியையிடம் கையளிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.




















SHARE

Author: verified_user

0 Comments: