திருகோணமலையின் அனைத்து லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை முகாம் 4ம், 5ம், 6ம் திகதிகளில் திருகோணமலை தள வைத்தியசாலையில் நடைபெறுகிறது.
நாடாளாவிய ரீதியிலிருந்து ஒருங்கமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள்,வைத்தியர்கள், தாதியர் உள்ளடங்கலாக 40 பேர் கொண்ட குழுவானது, இம்முறை கிழக்கு மாகாணத்திலுள்ள 32 நபர்களுக்கான சத்திர சிகிச்சையை நடத்துகின்றனர்.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இச்சத்திர சிகிச்சைகள் மூலமாக பிறவிக் குறைபாடுகள் மற்றும் ஏதேனும் விபத்துகளின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் பயனடைகின்றனர்.
இவ் செயல்திட்டமானது, கடந்த 17 வருடகாலமாக நடத்தப்பட்டு வருவதாகவும் இம்முறை வட கிழக்கினை மையப்படுத்தி இச்சத்திர சிகிச்சை முகாம் மேற்கொள்ளப்படுவதாகவும் இக் குழுளுவின் தலைவர் சத்திரசிகிச்சை நிபுணரும் வைத்தியருமான டயஸ் அவர்கள் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment