களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலனசபைத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பி.இந்திரகுமார், ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா, கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், பிரதேச சபைச் செயலாளர் திருமதி வ.யாகேஸ்வரி மற்றும், வாசகர் வட்டத்தினர், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வாசிகசாலைக்குவரும் வாசகர்களின் நன்மை கருத்தி சனிக்கிழமையிலிருந்து, இலவச வைபைவ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலனசபைத் தலைவர் அ.கந்தவேளினால் களுவாஞ்சிகுடி கிராம மக்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகுதி நூல்களும் நூலகரிடம் கையளிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment