சமூதாய அடிப்படையிலான அமைப்புக்களை பலப்படுத்துவதற்கான வாழ்வின் எழுச்சி முகாமையாளர்கள், மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இரண்டுநாள் பயிற்சி பட்டறை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (17) ஆரம்பித்து வைக்கப் பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வாழ்வின் எழுச்சித் திட்ட முகாமையாளர் எம். உதயகுமார், வி.வரதராஐன் அகியோர் கலந்து கொண்டு வரிவுரைகளை நிகழ்த்தினர்;.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழ்வின் எழுச்சித்திட்ட முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment