விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் இணைப்பு செயலாளராக கல்முனையை சேர்ந்த வ.பைரோஸ் நியமனம்
கல்முனையை வசிப்பிடமாகவும் சென்றல் கேம்பை பிறப்பிடமாகவும கொண்ட வாஹாப்தீன் பைரோஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் இணைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கல்முனையை வசிப்பிடமாகவும் சென்றல் கேம்பை பிறப்பிடமாகவும கொண்ட வாஹாப்தீன் பைரோஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் இணைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் சென்றல்கேம் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியினையும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர் கல்வியினையும் பெற்றவராவார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான (ஆங்கில மொழி) பட்டத்தை பூர்த்திசெய்து கொண்ட இவர் பொதுநிர்வாகம், மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம் ஆங்கிலம், சிங்களம் போன்ற துறைகளில் டிப்ளோமா பட்டங்களையும் நிறைவு செய்துள்ளார்.
சமுக சேவைகளில் அதிக அக்கறை கொண்ட இவர் ஜெ.வாஹாப்தீன், எம். ஐ.கதிஜா உம்மா ஆகியோரின் மூத்த புதல்வரும் ஆவார்.
0 Comments:
Post a Comment