திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மகாதிவுல்வெவ நன்னீர் மீனவ கூட்டுறவுச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மீன்பிடிச்சங்க கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு சங்கத்தினருக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மாகாண காணி அமைச்சர் திருமதி.ஆரியவதி கலபதி ஆகியோர் கலந்து கொண்டதுடன், நன்நீர் மீன்பிடித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சுதாகரன், திணைக்கள அதிகாரிகள், மகாதிவுல்வெவ பிரதேச மீன்பிடிச் சங்கத்தினர், பிரதேச பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாகாண அமைச்சனி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மீனவர் சங்க கட்டிடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன், மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment