6 Dec 2015

உலகத்திலே இந்து சமயம் நான்காவது இடத்தில் காணப்படுகிறது

SHARE
உலகத்திலே இந்து சமயம் நான்காவது இடத்தில் காணப்படுகிறது, அதிலும் தமிழர்களின் சமயம் இந்து சமயம் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்
அகில இலங்கை இந்து மாமன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து மன்றத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமை உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்,இந்து சமயத்தை பாதுகாக்க மண்ணில் உதித்தவர்கள்தான் சுவாமி விபுலானந்தர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், எமது ஈழ நாடும், இந்திய நாடும் அன்னியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் சுவாமி விபுலானந்தர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆகியோர் தமிழையும், தமிழோடு சேர்ந்து சைவத்தையும் வளர்த்தார்கள், பாதுகாத்தார்கள். இன்றுவரை நாங்கள் அதனை பின்பற்றி சென்று ஏற்பாடு செய்து வருகின்றோம். இலங்கையிலே 1900ம் ஆண்டுகளில் எமது இந்துக்கள் 23 வீதம் இருந்தோம். ஆனால் தற்போது 12.6 வீதம் இருக்கின்றோம். நாங்கள் இந்த மண்ணிலே எந்தளவு வீழ்ச்சி கண்டிருக்கின்றோம் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். அது எதனால் ஏற்பட்டது என்றால் மேலை நாட்டாரின் வருகை 1505ம் போர்த்துக்கீசர், 1602ம் ஆண்டு ஒல்லாந்தர், 1796ம் ஆண்டு பிரித்தானியர்கள் வருகை தந்தார்கள், அவர்களது மதங்களை எமது மக்கள் மத்தியில் தினித்தார்கள், கலாச்சாரத்தை உட்புகுத்தினார்கள், அதன் பின் மதமாற்றங்கள் நடைபெற்றன. இதனால் எமது சமயத்தவர் மதம் மாறுவதற்கு வழி வகுத்தது” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியா இளையவட்டம் பேரூர் ஆதினத்தின் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பரமச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ், அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவர் க.நீலகண்டன், மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எழில்வாணி பத்மகுமார், கல்லடி காயத்திரிபீட பிரதமகுரு சிவயோகச் செல்வன் சாம்பவசிவம் சிவாச்சாரியார், இந்து அமைப்பு பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: