22 Dec 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் குடிசன தொகையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் குடிசன தொகையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் எட்டாவது ஆண்டு கழகத்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 

இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்

அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்களே மாறியுள்ளார்கள். கொள்கை மாறவில்லை. இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த அரசாங்கத்தை நம்பி பல வகையில் ஆதரவை  மறைமுகமாக வழங்கிவருகின்றது. ஆனால் எங்களுக்கு எந்த ஆதரவையும் இதுவரையில் அவர்கள் வழங்கவில்லை. இந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்தோம். அது தொடர்பில் ஜனாதிபதியோ பிரதமரோ எமக்கு ஆதரவு தந்து அவற்றை வழங்கவில்லை. 

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை மனிதாபிமான முறையில் விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம் அதுவும் நடைபெறவில்லை. எமது தலைவரிடம் சில உறுதிமொழிகளைக் கூட வழங்கினார்கள். சிறைக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று எமது தலைமை கூட நம்பியது. ஆனால் ஏமாற்றிவிட்டார்கள். இறுதியாக மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு தலைமைப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்று கூறினார்கள். அது தொடர்பான பல பூதாகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

ஆனால் தற்போது இணைத்தலைமைகளை வழங்கிக்கொண்டுள்ளனர். இவர்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுகின்றார்கள். ஆனால் இதுவரையில் சரியான ஆதரவை  தமிழத்; தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆளுநராக இராணுவத்தில் இருந்தவர்கள் இருந்தார்கள். நாங்கள் நடவடிக்கை எடுத்து அவர்களை மாற்றுமாறு கூறினோம். நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம் அவர்களை மாற்றியது. 

ஆனால்இ இன்று கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பில் தமிழர்களின் குடிசன தொகையை  மாற்றுவதற்கு திட்டமிடுகின்றார். இந்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. கல்குடா தொகுதியில் காராமுனை என்னும் பகுதியில் 158 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்குமாறு பிரதேச செயலாளரையும் மாவட்ட செயலாளரையும் அழைத்துக் கூறியுள்ளார். இந்த ஆளுநர் பதவியேற்ற பின்னர் பெரும்பான்மையினக் குடும்பங்களை குடியேற்றுவதிலேயே அக்கறை செலுத்திவருகின்றார். குறிப்பாக புணானைப்பகுதியில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 05 குடும்பங்கள் வாழ்ந்தன. 

ஆனால்இஇன்று திட்டமிட்ட வகையில் 29 பெரும்பான்மையினக் குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளன. மேலதிகமாக 24 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் 56 குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள வரவு –செலவுத்திட்டத்தில் கூட அரசாங்க ஊழியர்களுக்கு தொடர்மாடி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் உத்தியோகஸ்தர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் தெரிவுசெய்துள்ளனர்.

அவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே வழங்கவேண்டும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். வெளியில் உள்ளவர்களை கொண்டுவந்து இங்கு குடியேற்ற அனுமதிக்கமாட்டோம் என்பதையும் தெளிவாக தெரிவித்துள்ளோம் என்றார்.   

SHARE

Author: verified_user

0 Comments: