22 Dec 2015

அரசியல் தீர்வு ஒன்றைப் எமது தமிழ் சமூகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுமை காக்கின்றது.

SHARE
அரசியல் ரீதியான தீர்வு தமிழ் மக்களுக்கு நிட்சயமாகத் தேவையாகவுள்ளது. இதற்காகத்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஒரு இணக்கப்பாட்டு அரசியல் போன்று அரசாங்கத்துடன் நடந்து கொள்கின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 8 வது அண்டு நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை மாலை பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம், எவ்வளவு தூரம் புறந்தள்ளினாலும்கூட தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு வரவேண்டும் என்பதற்காக தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் எல்லாவற்றையும், பொறுத்துக்கொண்டு, இந்த இனப்பிரச்சனைக்குத் தீர்வு எட்டும்வரை நாங்கள், அரசைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு இணக்கப்பாட்டு அரசியலிலே அவர் இருந்து கொண்டிருக்கின்றார்.

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்துக் கைஉயர்தியது தமிழ் என்பது வரலாறு இல்லை. ஆனால் இவ்வருடம் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரித்துக் கை உயர்தி இருக்கின்றார்கள் என்றால் அரசியல் தீர்வு ஒன்றைப் எமது தமிழ் சமூகம், பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுமை காக்கின்றது. என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: