13 Dec 2015

த.தே. கூட்டமைப்பைப் பிரிக்கும் அளவிற்குச் செயற்படும் அனாமதேய இணையத்தளங்கள் மீது விரைவில் சட்டநடிவடிக்கை எடுக்கப்படும் - ஜனா ( வீடியோ)

SHARE
எமது தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும், எமது தமிழினத்திற்கு இந்த நாட்சி அரசு சம உரிமை வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புதிய நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டது. இருந்த போதிலும், தமிழ் மக்கள் எதிர்பார்தது கிடைக்கவில்லை.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட களுவாஞ்சிகுடி பொது நூலகத்தின் கணணி மயப்படுத்தப்பட்ட உசாத்துணைப் பகுதி சனிக் கிழமை (12) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 12000 தமிழீழ விடுதலைப் புலிகளை புணர்வாழ்வழித்து விடுதலை செய்த இனவாதிகள் தற்போது வந்துள்ள புதிய அரசு 217 அப்பாவி தமிழ் அரசியல் கைத்திகளை விடுதலை செய்வதில் அஞ்சுகின்றனர். இது புதிய அரசின் அரசியல் நாடகமாகத்தான் இருக்கின்றது.

இந்த புதிய நல்லாட்சி அரசை உருவாக்கிய தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போகின்றார்களா? அல்லது இனத்துவேசிகளின் கூச்சலிக்குப் பயப்படுகின்றார்களா என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மாவட்டங்களில் பொரும்பான்மை உறுப்பினர்களை வென்ற கட்சிக்கே மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி வழங்குவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தர். ஆனால் இந்த நாட்டிலே என்ன நடைபெறுகின்றது, யாழ்ப்பாணத்திலே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் ஒருவருக்கும், வன்னியிலே அமைச்சர் றிசாட் பதியுதீனும், மட்டக்களப்பிலே பிரதியமைச்சர் அமீரலியுமாக,  அரசாங்கத்தின் அமைச்சர்களைக் கொண்ட நபர்கiளேயே இந்த அரசு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர்களாக நியமித்து வருகின்றது.  பெரும்பான்மைத் தமிழினம் வாழும் கிழக்கு மாகணத்திலுள்ள மாவட்டங்களில் கூட ஒரு தமிழரையாவது மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராகக்கூட நியமிக்காத இந்த நல்லட்சி என்று சொல்லப்படுகின்ற அரசு எவ்வாறு எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கப் போகின்றது. இது இந்த அரசை உருவாக்கிய தமிழ் மக்களுக்கு இந்த அரசு செய்யும் பாரிய துரோகமாகும். எனக்குறிப்பிட்ட அவர்

சமூகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக வடகிழக்கில் பல பத்திரிகையாளர்கள் பலதியாகங்களைச் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது வெளிநாடுகிளிலிருந்து இயங்கும் அனாமதேய இணையத்தளங்கள், தமிழ் மக்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிரிக்கும் அளவிற்கு செயற்பட்டு வருகின்றன. ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் முகவரியற்ற இணையத்தளங்கள், மிகவும் கீழ்த்தரமான முறையில் செயற்பட்டு வருகின்றன, தமிழ் மக்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிரிக்கும் அளவிற்கும் தனிநபர்களைப் பற்றி அவதூறாக விமர்சிக்கும் இணையத்தளங்கள் பற்றி மிகவிரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

முகவரியற்ற முறையில் செயற்படும் இணையத்தளங்களோ அல்லது வேறு யாராவதோ தமிழ் மக்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், பிரிக்கமுற்படுவர்களை,  1982 ஆம் ஆண்டிலிருந்து இன்றுரை எமது தமிழ் மக்களின் விடுதலை வேண்டி அரசியல் பணியில் ஈடுபடும் நான் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுகின்றேன். என அவர் மேலும் குறிப்பிட்டார்.


SHARE

Author: verified_user

0 Comments: