மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களுக்களின் பிரதிநிதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிலுள்ள ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.
மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் பிரதிநிதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், எஸ். வியாழேந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான ஆர். துரைரெட்ணம், கே.கருணாகரம்(ஜனா), இ. பிரசன்னா, எம். நடராஜா, சிப்லி பாரூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது, மாற்றுத்திறனாளி அமைப்புக்கள் தங்களது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளனர்.
அத்தோடு, இவற்றினைத் தீர்த்துத் தருவதற்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
முக்கியமாக பார்வையற்றவர்களுக்கான பாடப் புத்தகம், போக்குவரத்து வசதிகள், வாய்பேச முடியாதவர்களுக்கான கல்வி முறைகள், பாடசாலைகள், வேலைவாய்ப்புக்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment