சலுகைகளுக்காக விலைபோவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல அவ்வாறு விலைபோகியிலுந்தால் தற்போது நாடாளுமன்றத்தில் பல அமைச்சுக்களைப் பெற்றிருக்கும், எங்களுக்கென்று சில பிடிமானங்கள் இருக்கின்றது அதிலிருந்து நாம் வழுகமுடியாது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையில் ஆண்டு இறுதி நிகழ்வும் பரிசழிப்பு விழாவும், வியாழக் கிழமை (24) நடைபெற்றது. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலுந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்..
சர்வதேசத்தின் பார்வை இலங்கையின் மீது விழுந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் எமது இனப்பிரச்சனைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும். நல்லாட்சி பற்றிக் குறிப்பிடுகின்ற இவ்வரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாட்டினால் 2016 ஆம் ஆண்டில் எமது இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். இனப்பிச்சனை;கான தீர்வு காணப்படுகின்ற பட்சத்தில் அதன் பின்னர் எமது செயற்பாடுகள் தொடர்பில் எமது கெர்ளளைகளை வகுத்துக் கொள்வோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சலுகை அரசியலுக்காகச் செயற்படுவது அல்ல இக்கூட்டமைப்பு கட்டுக்கோப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் அதனை தாறுமாறாக விசர்சிக்கக்கூடிய நிலையில் மற்றவர்கள் இருக்கக் கூடாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிகும் தமிழ் மக்கள் புள்ளடியிடும், இயந்திரங்களாக இருக்கின்றார்கள், அவர்கள் எந்த வித சலுகைகளையும், அனுபவிக்கவில்லை, அவர்கள் கஷ்ட்டங்களை அனுபவிக்கின்றார்கள், என புதன்கிழமை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இநிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பெறுப்புவாய்ந்த அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் இலகுவான விடையம், நான் பிறருடைய பெயரைச் சொல்லி விமர்சிப்பதற்குத் தயாரில்லை ஆனால் பிரதியமைச்சர் மேற்படி பிடையங்களைத் தெரிவித்துள்ளார். பிரதியமைச்சருக்கு நான் தெரிவித்துக் கொள்கின்றேன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களுடன் இணைந்து நியாயமாக, நிதானமாக சேர்ந்து ஒற்றுமையுடன் பயணிக்கத் தாயாராக இருக்கின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை, அமைச்சர்கள் உள்ளிட்ட யாவரும் சீண்டிப்பார்பதை, நோண்டிப்பார்ப்பதை, தவிர்க்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment