23 Dec 2015

பெண்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் நோக்கிலான கலந்துரையாடல்

SHARE
(இ.சுதா ,க.விஜி)

சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம் பெயர்தலை மட்டுப்படுத்தலும் எனும் கருத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று இன்று மட்டக்களப்பு  - துறைநீலாவணையில் இடம்பெற்றது.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் துறைநீலாவணை தெற்கு ஒன்று கிராம சேவகர் பிரிவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

துறைநீலாவணை விபுலானந்தர் வித்தியாலயத்தில் அம்கோர் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட முகாமையாளர் ச.சக்தீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துறைநீலாவணை தெற்கு ஒன்று கிராம சேவகர் தி.கோகுலராஜ், அம்கோர் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்கள் உட்பட பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அம்கோர் நிறுவனத்தின் நிகழ்ச்சி தொடர்பான விளக்கங்கள், கடன் உதவி தொடர்பான விடயங்கள்இ இந்நிறுவனத்தினால் வழங்கப்படும் கடன் உதவியில் மூன்றில் இரு பகுதியினை மாத்திரம் பயனாளிகள், திருப்பிச் செலுத்தும் நடைமுறை தொடர்பான ஆலோசனைகள் உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 



SHARE

Author: verified_user

0 Comments: