10 Dec 2015

கிழக்கு மாகாண முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மை விருத்தி பயிற்சி

SHARE
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மை விருத்தி பயிற்சி நெறி ஒன்று இன்று காலை  (10) மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் இரண்டுநாட்கள் நடைபெறும் இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் பணிப்பாளர் திருமதி சந்திமா சிகேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் பணிப்பாளர் வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பருவ கல்விப் பணிப்பாளர் திருமதி ஜெயா தம்பையா ஆகியோர் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றிவரும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கு கொண்டனர்.

இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறும் பயிற்சி நெறியில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதும் பராமரிப்பு வழங்கும் குழுவினரை இனங்காண்பதம் அவர்களை விழிப்பூட்டுவதும், பெற்றொரை வழிப்பூட்டுவதற்காக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகளும் பொறுப்புகளும் முன்பிள்ளைப் பருவச் சிறார்களுக்கான ஆக்கச் செயற்பாடுகள், முன்பிள்ளைப் பருவச் சிறார்களுக்கான ஆழகியற்கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தலைப்புக்களில் விரிவுரைகள் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நாளை (11) மன அழுத்த முகாமைத்துவம், முன்பிள்ளைப் பருவ சிறார்களுக்கான விளையாட்டுக்கள், விசேட தேவையுடைய பிள்ளைகளை விளங்கிக் கொள்ளுதல் உள்ளிட்ட தலைப்புக்களில் விரிவுரைகள் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

வளவாளர்களாக வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பருவ கல்விப் பணிப்பாளர் திருமதி ஜெயா தம்பையா, மட்டக்களப்பு கல்வி வலய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் முத்துராஜா புவிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: