23 Dec 2015

வசமாக மாட்டிய திருடன்

SHARE
(இ.சுதா)

அம்பாறை பெரியநீலாவணையிலுள்ள வீட்டினுள் இன்று புதன்கிழமை (23) அதிகாலை 2 மணியளவில் புகுந்த மூன்று திருடர்கள் கதவினை உடைத்து பணம் மற்றும், தங்க நகை போன்றவற்றைத் திருட முயற்சித்த போது வீட்டு உரிமையாளர் கூச்சலிட்டமையினால் அயலவர்களின் உதவியுடன் திருடர்களில் ஒருவர் மடக்கி பிடிபட்டதுடன் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட நபர், அயலவர்களின் உதவியுடன், கட்டிவைக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை குற்றப் புலனாய்வுப் பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்ததுடன் தப்பிச் சென்றுள்ள இரு திருடர்களையும் கைது செய்யு நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கல்மனை பொலிசார், மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: