கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செலயகமும் இணைந்து நடத்தும் மாவட்ட இலக்கிய விழா எதிர்வரும் வியாழக் கிழமை 17 ஆம் திகதி மட்.நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலயத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன் இன்று திங்கட் கிழமை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முதன்மை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட காலாசார போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள் உட்பட 45 பேருக்கு சான்றிதழ்களும், பரிரில்களும், வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலயத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment