மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன் கிட்ஸ் ஹோம் பாலர் பாடசாலையின் விடுகை நிகழ்வும், பரிசழிப்பு விழாவும் வெள்ளிக் கிழமை (04) மட்.செட்டிபாளையம், மகாவித்தியாலயத்தின் விபுலானந்தா மண்டபத்தில் நடைபெற்றது.
செட்டிபாளையம் சிவன் கிட்ஸ் ஹோம் பாலர் பாடசாலையின் அதிபர் கே.துரைராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில்ப பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், உதவிப் பிரதேச செயலாளர், எஸ்.சத்தியகௌரி, செட்டிபாளையம் மயாவித்தியாலய அதிபர் ரீ.அருள்ராசா, பாலர் பாடசாலைகள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட கள உத்தியோகஸ்தர் எஸ்.பரணீதரன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ; கிட்ஸ் ஹோம் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பாடசாலையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும், வழங்கப்பட்டதோடு, மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுகையும், இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment