தமிழ் இளைஞர்கள், யுவதிகள் எதிர்வரும் காலங்களில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
நேற்று கிரான்குளம் சன்பிளவர் விளையாட்டுக் கழகத்திற்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் நீதி ஒதுக்கிட்டின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிரான்குளத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மேலும் குறிப்பிட்டதாவது,
எமது தமிழ் இளைஞர், யுவதிகளின் கல்வி, விளையாட்டு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன் எம்மால் பல செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும்,
எமது மாணவர்களும், இளைஞர் யுவதிகளும், கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதோடு பாடசாலை கல்வியை முடித்த பின் விளையாட்டில் ஈடுபட்டு தமது தேகாரோக்கியத்தை பேண வேண்டும்,
அத்தோடு உங்களால் முடிந்தால் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறியதுடன் இவ்வாறு கல்விக்காக சேவை புரிபவர்கள் எம்மோடு இணைந்து செயல்படும் போது எமது சமூகத்திற்கு அதிக நன்மைகளை பெற்றுக் கொடுக்க முடியும் எனக் கூறியனார்.
மேலும் இந் நிகழ்வில் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான கடினப் பந்து கிரிக்கெட் உபகரணங்களை சன்பிளவர் விளையாட்டுக் கழகத் தலைவரிடம் கையளித்தார்.
0 Comments:
Post a Comment