மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை காந்திபுரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் தலா 9000 ரூபாய் படி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.றயாழ் இன்று செவ்வாய்க்கிழமை தண்டம் விதித்துள்ளார்.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் திங்கட்கிழமை (21) இரவு கைதுசெய்யப்பட்ட இம்மூவரிடமிருந்து சுமார் 62 கிராம் 51 மில்லிக்கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment