10 Dec 2015

ஊத்துச்சேனைக் குளம் மக்கள் பாவனைக்கு

SHARE
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனைக் குளம் புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தினால் (ஐ.ஓ.எம்.) புனரமைப்புச் செய்யப்பட்டு நேற்று 9080 மக்களிடம் கையளிக்கப்பட்டது. அக்குளம் ஐ.ஓ.எம் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் முஜாஜிக் அமேலாவினால் புதன் கிழமை  (09) திறந்து வைக்கப்பட்டது.
ஐ.ஓ.எம் நிறுவனத்தின் நிதியதவி கொண்டு 11 மில்லியன் செலவில் இப்பிரதேசத்தின் விவசாயிகளின் நலன் கருதி இவர்களது உற்பத்தியினை அதிகரிப்பதனை நோக்காகக் கொண்டு இந்த ஊத்துச்சேனை அணைக்கட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் என். சிவலிங்கத்திடம்  ஐ.ஓ.எம் நிறுவனத்தின் பொறியிலாளர் மொஹமட் பாஹீமால் இந்தக் குளம் புனரமைக்கப்பட்டதற்கான ஆவணம் கையளிக்கப்பட்டது.

ஊத்துச்சேனை கிராமம் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர்பிரிவிலுள்ள நெல் உற்பத்தினை ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்ட 140 குடும்பங்களும் 560 தனிநபர்களையும் கொண்டதொரு கிராமமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வடக்காக 85 கிலோமீற்றரிலுள்ள மீள்குடியேற்றக் கிராமங்களில் ஒன்றே ஊத்துச்சேனையாகும்.

யுத்தம் காரணமாக 22 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்நது 2009ஆம்ஆண்டு மீளக் குடியமர்த்தப்பட்டனர். பல்வேறு அமைப்புக்களின உதவிகளுடன், வாழ்வாதாரம், உட்கட்டுமானம் மற்றும் வீடுகள் அமைத்துக் கொடுக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த குளம் மற்றும் அணைக்கட்டின் புனர் நிர்மாணத்தன் மூலம் இப்பிரதேசத்தில் ஏற்கனவே செய்கை பண்ணப்பட்ட 200 ஏக்கருக்கு மேலதிகமாக 150 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் வெள்ளப்பாதிப்பும் தணிக்கப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் என். சிவலிங்கம், ஐ.ஓ.எம் நிறுவன மாவட்ட பொறுப்பதிகாரி எம். ஜெயராஜன், நிறுவனத்தின் பொறியிலாளர் மொஹமட் பாஹீம், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: