மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன், (அமல்) 16.12.2015 அன்று நாடாளு மன்றத்தில், வடக்கு கிழக்கில் வீட்டுத் திட்டங்களின்போது, குறிப்பாக கிராம உத்தியோகஸ்தர்கள், பணத்தினை வாங்கி விட்டு மோசடி செய்வதாக கூறியுள்ளார். இக்கருத்தினைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கம், இன்று வியாழக் கிழமை (17) மாலை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…
மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் (அமல்) தெரிவித்துள்ள கருத்தை எமது மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கம், வன்மையாகக் கண்டிக்கின்றது. எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிதேஸ்ட அமைச்சர்கள், இதுவரையில் தெரிவிக்காத கருத்தை, இவர் தெரிவித்துள்ளார்.
அவர் எங்கே எப்போது என்பதைத் நிருபிக்க வேண்டும், நிருபீக்கா விட்டால், அவரது கருத்தை வாபஸ்பெற வேண்டும், என எமது சங்கம் கேட்டுக்கொள்வதுடன், இவ்விடையம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இர.சம்மந்தன், மற்றும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராச சிங்கம், ஆகியோருக்கும், இவ்விடையம் தொடர்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment