மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் திங்கட் கிழமை இடம்பெற்ற வீதிவிபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிச் மேட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துவிச்சக்கரவண்டியில் களுவாஞ்சிகுடி பிரதான வீதியை ஊடறுத்துச் செல்ல முற்பட்ட ஒருவர் மீது மோதியுள்ளதனாலே இவ்விபத்து சம்பவித்ததாக இதனை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் படுகாயடைந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரும், பொதுமகன் ஒருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment