மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்குள் ஞாயிற்றுக் கிழமை இரவு (13) புகுந்த பாட்டுயானைகள் பால் குளிரூமட்டும், நிலையத்தின் ஒரு பகுதியில் அமைந்திருந்த கதவு ஒன்றினை உடைத்துள்ளதுடன், சுற்று வேலியையும், உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.
மூன்று காட்டுயானைகளைக் கொண்ட கூட்டம் ஒன்று வந்துள்ளதாகவும், இதனால் பால் குளிரூட்டும் நிலையத்தைச் சுற்றி விதைத்திருந்த நெல்வயலும் சேதமடைந்துள்ளதாகவும், இவற்றால் சுமார் 30000 ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பால் பால் குளிரூட்டும் நிலையத்தின் முகாமையாளர் எஸ்.எழில்வேந்தன் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல்களும், அட்டகாசங்களும், தொடர்ந்த வண்ணமுள்ளன. இருந்த போதிலும் இந்த காட்டு யானைகளை விரட்டியடிக்க சம்மந்தப்பட்டவர்கள் தகுந்த திட்டத்தை இதுவரையில் முன்நெடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment