மட்டக்களப்புக்கு விடிவு காண வாருங்கள், என தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமைல) துண்டுப்பிரசுரம் ஒன்றை வியாழக் கிழமை (24) மாலை வெளியிட்டுளார். அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…
இன்றய கால காலத்தில் அரசியல் கைத்திகளின் விடுதலையும், காணாமல் போனோரின் விடையங்களும், எமது மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட சொந்தக் காணிகளில், மீள் குடியேற்றப் பிரச்சனையும், நாம் முக்கியமாக முகம் கொடுக்கும் வேளையில் நிரந்தர அரசியல் தீர்வுக்கான நகர்வையும், எமது அரசியல் பயணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் தொரிவிக்காமல் செய்து வருகின்றோம், என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இன்னநாள் இழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் இருந்து கொண்டிருக்கம் நான், இக்கால அரசியல் நீரோட்டத்தில் மாவட்ட முன்னேற்றத்திற்கான தமிழ் மக்களின் பிரச்சனைகளை மக்களின் கோரிக்கைகளுக்கு, அவர்களது தேவைகளுக்கும். அவர்களது உரிமைக்களுக்கும் இணங்க, செயற்பட வேண்டிய கட்டாயப்பாடு என்முன்னே நிற்கிறது.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியினால், அளிக்கப்பட்ட வாக்குறுதியானது எந்தக் கட்சி அதிகப்படியான வாக்குகளை ஒரு மாவட்டத்தில் பெறுகின்றதோ அந்தக் கட்சிக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
வாக்குறுதியின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கே மட்டக்கப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.
தற்போதிருக்கும் மாவட்ட அரசாங்க அதிபரை நீக்கி புதிய அரசாங்க அதிபரை நியமனம் செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபரை புதிதாக நியமிக்க வேண்டிய காரணம்:
கடந்த 4 ஆண்டு காலமாக அதிக நிதி மட்டக்களப்பு மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட போதிலும், முறைகேடான வேலை ஒப்பந்தங்களை வழங்கி, தரமற்ற வேலைகள் காரணமாகவும் பொருத்தமற்ற வேலைகள் காரணமாகவும், ஒழுங்கீனமான நிருவாகம் காணரமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயன்பெறாதா பல அதிகாரிகள் நன்மையடைந்தனர்.
இதேபோன்று மாவட்டத்தின் வாழ்வாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையிலான பல மோசடிகள் இடம்பெற்றன , விசேடமாக மேச்சல் தரை நிலம், கால்நடைவளர்ப் போரிடமிருந்து பறிக்கப்பட்டது.
ஏழை மக்களினுடைய ஆயிரக்கணக்கான வாழ்வாதார நிலம் பணக்கார முதலீட்டாளர்களக்கு, முறை கேடாக வழங்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்க்படப்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி இன்னும் வழங்க வேண்டி இருக்கின்றன.
இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் குடியேற்றப்படாமல் அவர்களுக்கான வசதிகள் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டடு வருகின்றன.
கடந்த ஆட்சிக் காலத்தில் வெள்ள நிவாரணங்களுகடகாக ஒதுக்கப்பட்ட நிதிகளும், நிவாரணப் பொருட்களும், கடந்த ஆட்சியில் அரசியல் வாதிகளாக இருந்தவர்களுக்கு, அரசாங்க அதிபரினால் அரசியல் செய்வதற்கு வழங்கப்பட்டது.
தற்போது இடம்பெற்ற வெள்ள அனத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
அனர்த்த முகாமைத்துவப் பணிகள் யாவும் மத்திய அரசாங்கத்தின், மாகாணத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ள வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் அனைவரும், எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9 மணிக்கு மட்டக்களப்பு காந்தி சதுக்கதில் வருமாறு அழைக்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment