17 Dec 2015

போசாக்குத் திட்டத்தினை செயற்படுத்துவது சம்பந்தமான குழுக் கூட்டம்

SHARE
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் போசாக்குத் திட்டத்தினை செயற்படுத்துவது சம்பந்தமான போசாக்கு மட்டக் குழுக் கூட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக் கிழமை (17) நடைபெற்றது.
போசாக்கு மட்டக் குழுவின் தலைவரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளருமான எம்.கோபாலரெத்தினம் தலமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உதவித் திட்ட பணிப்பாளர் திருமதி எஸ்.பாக்கியராசா, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்கள், கிரமசேவை உத்தியோகத்தர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கற்பிணிப் பெண்களுக்காக வழங்கப்படகின்ற சத்துனவுப் பொதிகள் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும், வழங்கப்படும் பொருட்கள் சரியான தரமான பொருட்களாக அமைய வேண்டும் என பிரதேச செயலாளரினால் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்து கொண்டார்.


SHARE

Author: verified_user

0 Comments: