2 Dec 2015

திருகோணமலை மாவட்ட இலக்கிய விழா

SHARE
இவ்வாண்டுக்கான  திருகோணமலை மாவட்ட இலக்கிய விழா இன்று (02) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலக ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற பலருக்கு இதன்போது பரிசில்களும் சான்றிழ்களும் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டன. 
இலக்கியங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவதுடன் மக்களுக்கிடையே இணக்கத்ததை ஏற்படுத்த ஏதுவாக அமைவதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் இணக்கமாக வாழ்வது சிறப்பிற்குரிய விடயம் என்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருமலை மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: