மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கல்லடி பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த இரண்டு பிள்ளைகளிள் தாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த குடும்பப் பெண் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய எடுத்த முயற்சி பொது மக்களின் உதவியுடன் தடுக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழூரைச் சேர்ந்த 28 வயதான மார்க்கண்டு மாலினி என்ற பெண்ணே இவ்வாறு பாலத்தினுள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பெண் குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இப்பெண்ணை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன
0 Comments:
Post a Comment