சர்வதேச ஊழல் எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச செயலகத்தில் உத்தியோகஸ்தர்கள், உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு புதன் கிழமை (09) இடம்பெற்றது.
பிரதேச செயலக முன்றலில் தேசியக் கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இலங்கையை ஊழலற்ற நாடாகக் கட்டியெழுப்புவோம், இவற்றுக்கு அனைத்து அரச உத்தியோகஸ்த்தர்களிடையேயும், எண்ணக்கரு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவோம். என பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இதன்போது உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகஸ்தர் உள்ளிட்ட அனைத்து உத்தியோகஸ்தர்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment