ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் செயற்படும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் கழகங்களுக்கு 8 இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை (09) மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
விளையாட்டுடனான அபிவிருத்தி என்ற திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சுகத் ஹேவாவிதாரண ஆகியோர் பிரதம அதிதிகளாகக கலந்து கொண்டனர்.
இத்திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் யுனிசெப் மற்றும் பிளான் சிறிலங்காவும் நடைமுறைப்படுத்துகின்றன. இத்திட்டத்தில் ஆரம்பக் கட்டமாக மாவட்டத்திலுள்ள 7 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 32 இளைஞர் கழகங்கள் தெரிவு செய்யப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இளைஞர்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விளையாட்டுடனான அபிவிருத்தித்திட்டத்திற்கென மொத்தமாக 4.3 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் குழந்தை ஜெபகுமார் ஆகியோருடன் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பிளான் சிறிலங்கா நிறுவனத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எஸ்.டேவிட், செயல்திட்ட ஆலோசகர் ரி.ஆர்.ரூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டு உபகரணங்கள் வழங்கினர்
0 Comments:
Post a Comment