6 Dec 2015

அகில இலங்கை இந்துமா மன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பம்

SHARE
அகில இலங்கை இந்து மா மன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிவதொண்டர் மாநாடு, நாவலர் நினைவு ஆன்மிக எழுச்சிக் கருத்தரங்கு ஆகியன இன்றுசனிக் கிழமை நிறுவன அரங்கில் ஆரம்பமானது.
இதனை முன்னிட்டு நாவற்குடா பேச்சியம்மன் கோவிலிலிருந்து ஆன்மிக எழுச்சி ஊர்வலம் ஆரம்பமாகி, சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் அரங்கை சென்றடைந்த பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வுகளில்,
இந்தியாவின் இளையவட்டம் பேரூர் ஆதினம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள்,
மட்டக்களப்பு இரதமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ் ,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் ஆய்வாளர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள், சமூகத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: