23 Dec 2015

28 ஆம் திகதி மாபெரும் கண்டனப் பேரணி

SHARE
(இ.சுதா)

கல்முனை மாநகர சபையின் நிருவாக எல்லைக்கு உட்பட்ட கரவாகு மேற்கு பிரிவிலுள்ள குறிப்பிட்ட விவசாயக் காணியினை   நகரமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் சுவீகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இதனைத் தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் திங்கட் கிழமை (22) செவ்வாய்ககிழமை கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக கேட்போர் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட கலந்துரையாடலில்,

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் உட்பட கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்இ சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நகர மயமாக்கல் வேலைத்திட்டம் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் மற்றும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பாரியளவிலான  கண்டனப் பேரணியினை எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை கல்முனை பிரதேசத்தில் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

SHARE

Author: verified_user

0 Comments: