13 Dec 2015

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 கிலோ பழுதமைந்த மீன் கைப்பற்றப்பட்ட

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார பிரிவுக்குட்பட்ட களுதாவளை பொதுச் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 கிலோ பழுதடைந்த மீன்களைக் கைப்பற்றி அழித்துள்ளதாக களுதாவளைப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.கிருபாகரன் தெரிவித்தார்.
களுதாவளைப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.கிருபாகரன், மற்றும் செட்டிபாளையம்,  பகுதிக்குப் பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர் எஸ்.இராஜேஸ்வரன், ஆகியோர் இன்று சனிக்கிழமை களுதாவளைப் பகுதியில் சுகாதார பரிசோதனைகளை முன்நெடுத்திருந்தனர்.

இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..

இன்று மேற்கொள்ளப்பட்ட சுகாதாரச் சுற்றிவளைப்பின்போது உணவு வகைகள், உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் கடைகள், மற்றும், பேக்கரிகள், போன்றவற்றின் சுகாதாரம் தொடர்பில் ஆராயப்பட்டதோடு, ஏனைய பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பிலும், ஆராயப்பட்டன.

இந்நிலையில் களுதாவளைப் பொதுச் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 கிலோ பழுதடைந்த மீன்களைக் கைப்பறி அழிக்கப்பட்டதோடு, இம்மீன்களை வைத்திருந்த இரண்டு வியாபாரிகளுக்கும், பொதுச்சுகாராத பரிசோதகர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: