23 Nov 2015

பாலர் பாடசாலை ஆசிரியர்சளுக்கும், பெற்றோர்களுக்கும், வீட்டுத்தோட்டம் தொர்பான பயிற்சி

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்ளுக்கும், பெற்றோர்களுக்குமான வீட்டுத்தோட்டம் தொர்பான பயிற்சி நெறி ஒன்று இன்று திங்கட் கிழமை (23) ஓந்தாச்சிமடம் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
 சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அனுசரனையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.அருந்ததியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் இப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பாலர் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசியரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வீட்டுத் தோட்டம் அமைத்தல், சிறுவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துமிக்க பயிர்களை நடல், வீட்டுத் தோட்டத்தைப் பராமரிப்பது போன்ற பல விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதில் களுவாஞ்சிகுடி பகுதிக்குப் பொறுப்பான விவசாயப் போதனாசிரியர் எஸ்.எழில்மதி கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.

இப்பயிந்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் காலாநிதி.எம்.கோபாலரெத்தினம், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.புவிதரன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ரி.தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையாக பயிர் விதைகளும், நாற்றுக்களும், பழமரக் கன்றுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: