17 Nov 2015

பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

SHARE
அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின்; கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு  கூடிய விரைவில் தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் சங்கத்தின் த
லைவர் எம்.திலீபன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். கடந்த மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபை அமர்;வின்போது, அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில்  ஆராயப்பட்டது. இந்நிலையில், நியாயமான தீர்வு தங்களுக்கு கிடைக்குமென்பதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.  இதற்காக முதலமைச்சர்; உள்ளிட்ட அனைவரும் முன்னின்று செயற்படுவார்களெனவும் அவர் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: