3 Nov 2015

காட்டு யானையின் தாக்குதலில் ஆலயத்தின் களஞ்சிய அறையும் வீடொன்றும் சேதம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள 35 ஆம் கிராமத்தில் திங்டக் கிழமை (02) மாலை புகுந்த காட்டுயானை ஒன்று இக்கிராமத்தில் அமைந்துள்ள நரசிங்க  வைரவர் ஆலயத்தின் கழஞ்சிய அறையினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் வீடொன்றையும் உடைத்து சேதப்படுத்திச் சென்றுள்ளது. 
இதனால் ஆலயத்தின் களஞ்சிய அறை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வீட்டில் விதைப்புக்காக வைக்கப்பட்டிருந்த 5 நெல்மூட்டைகளையும் காட்டுயானை சேதப்படுத்திச சென்றுள்ளதாக இக்கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காட்டுயானையின் பாதிப்புக்குள்ளான இடத்திற்கு திங்கட் கிழமை மாலை சென்ற கிழக்கு மகாணசபை உறுப்பினர் மா.நடராசா நிலமையினைப் பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இக்குறித்த பகுதியின் காட்டுப் பகுதியில் தங்கிநிற்கும் காட்டுயானைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் தற்போதைய நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக வேண்டி யானைப்பாதுகாப்பு வெடிகளை மக்களிடம் வழங்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.

தொடர்சியாக காட்டுயானைகளின் பாதிப்புக்குள்ளாகிவரும் தாம் தற்போதைய நிலையில் விதைப்புக்காக வைத்திருக்கும் விதை நெல்லைக்கூட பாதுகாப்பாக வைத்திருக்க முடியாமல் காட்டுயானைகளுக்குப் பயந்து இரவும் பகலும் கண்விழித்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளதாக அக்கிராமத்தவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
































SHARE

Author: verified_user

0 Comments: