30 Nov 2015

டெங்கு நுளம்புகளின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் துறைநீலாவைணையில்

SHARE
(இ.சுதா)
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக நிருவாக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
இபொலிஸ் உத்தியோகத்தர்கள்இகிராம உத்தியோகத்தர்கள் இசமூர்த்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புக்களுடன் இடம் பெற்ற டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை பரிசோதனை செய்யும் துரித வேலைத்திட்டம் கடந்த சனிக்கிழமை துறைநீலாவணைக் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் செயற்பட்ட சுமார் முப்பத்தி மூன்று பேருக்கு எதிராக நீதி மன்றம் ஊடாக தண்டணை வழங்குவதற்கு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: