18 Nov 2015

துறைநீலாவனையில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புகை விசிறும் நடவடிக்கை முன்நெடுப்பு

SHARE
(க.விஜி)

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட துறைநீலாவனை 07 ஆம் வட்டாரத்தில் டெங்கு நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதை அடுத்து பொதுசுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனையின் பெயரில் துறைநீலாவணை தெற்குப் பிரிவில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த புதன்; கிழமை (18) பி.ப. 6.00 மணியளவில் புகை விசுறும் வேலைத்திட்டம் கிராம உத்தியோகத்தர் தி. கோகுல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கிராம சேவை உத்தயோகஸ்தரான வி.கனகசபை, பொது சுகாதார பரிசோதகர் வி.வேணிதரன், மற்றும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், வர்த்தகர்கள், கிராம பொதுமக்கள், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகரி அலுவலக டெங்கு கட்டுப்படுத்தும் உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டவரின் இல்லத்தைச் சுற்றியும், இப்பிரதேசத்திலுள்ள ஏனைய வீடுகளுக்கும் டெங்கு நோயையும் டெங்கு நுளம்பையும் தொடர்ச்சியாக கட்டுப்படுத்தியும் அதனை தொடர்ச்சியாக துப்பரவு பேணம் நோக்கில்  வடிகாண்கள், பாழடைந்த வீடுகள், மலசலகூட வசதிகள், நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள் மற்றும் பற்றைக்காடுகள், வாழைமரத் தோட்டங்கள் போன்றவற்றில் புகை விசிறப்பட்டுள்ளது. 

மேலும் பிரதேசத்தில் பூரண டெங்கு கட்டுப்படுத்தும் நோக்கில் வழிகாட்டல் ஆலோசனைகளும், சிரமதானமும், பொதுச்சுகாதார பரிசோதகரினால் வழங்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. துறைநீலாவணை கிராமம் முழுவதும் பூரண டெங்குக்கட்டுப்பாட்டு பிரதேசமாக சுகாதார வைத்திய அதிகாரியினால் பிரகடணப்படுத்தப்பட்டு டெங்கு நுளம்பை பிரதேசத்தில் இருந்து ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்திருப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர் வி.வேணிதரன், இதன்போது தெரிவித்தார். 


















SHARE

Author: verified_user

0 Comments: