(இ.சுதா)
கல்முனை பிரதேச மக்களின் உளநல மேம்பாடு, உளநலப் பிரச்சினைகள் , சமூக நலன் அபிவிருத்தி என்பவற்றினை நோக்காகக் கொண்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உளநலப்பிரிவு ஏற்பாடு செய்துள்ள உளநல மேம்பாட்டுக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை (30) முதல் டிசம்பர் முதலாம் திகதி வரையுள்ள இரு தினங்களிலும் காலை 9.00மணி முதல் பிற்பகல் 5.00 மணிவரை கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் முரளிஸ்வரன் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
கண்காட்சி நிகழ்வில் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூடசன் பிரதம அதிதியாகவும் , கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவூடின் உட்பட வைத்தியர்கள் தாதியர் குடும்ப நல உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கண்காட்சியின் போது உளநல அறிமுகமும் மேம்பாடும் உளநோகளின் சிகிச்சை முறைகளும் மருந்துகளின் தொழிற்பாடும் உளப் பிரச்சினைகளில் தளர்வுப் பயிற்சிகளின் பயன்பாடு போதைப் பொருள் பாவனையின் தீங்குகளும் சிகிச்சை முறைகளும் உளநோயாளரின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் உளநோயின் சமூக நாணயத்தினைக் குறைத்தலும் அறிவூட்டலும் பாடசாலை உளச்சுகாதாரம் பாரிய உளநோய்கள் பால்நிலை வன்முறையும் தீர்வுகளும் ஆகிய விடயங்களை உள்ளீக்கும் வகையில் கண்காட்சி நடை பெறவுள்ளதுடன் , திங்கட் கிழமை மாலை 4.30 மணிக்கு முதல் முறையாக உள்ளக பயிற்சி வைத்தியர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் கண்காட்சிக்கான அனுமதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment