17 Nov 2015

மாடுகளை கொண்டுசென்ற இருவருக்கு தண்டம்

SHARE
திருகோணமலை, எத்தாபெந்திவௌயிலிருந்து  ரொட்டவௌப் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் 4 மாடுகளை ஏற்றிச்சென்ற இரண்டு பேருக்கு ஒரு இலட்சம் ரூபாய்
தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீகஹகே இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் படி இருவருக்கும்; ஒரு இலட்சம் ரூபாய்  தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மாடுகளை மாட்டு உரிமையாளர்களின் பற்றுச்சீட்டு காண்பிக்கப்பட்துடன் வழங்கமாறும் உத்தரவிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: