தற்பொது பெய்துவரும் தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் பத்திற்கு மேற்பட்ட உள்வீதிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால் அக்கிராம மக்கள் அவர்களது அன்றாட நடவடிக்கைகைகளிலும், உள்ளுர் போக்குவரத்துக்களில் ஈடுபடுவதிலும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு போக்குவரத்துச் செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டள்ள வீதிகளை தற்காலிகமாகவேனும் புணரமைத்து தருமாறு வேண்டுவதாக களுவாஞ்சிகுடி கிராம பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, வேண்டுகோள் விடுக்கின்றனர்.
களுவாஞ்சிகுடி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் கே.ஜி.கிருபைராஜா இவ்விடையம் தொடர்பாக தெரிவிக்கையில்
தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக களுவாஞ்சிகுடியில் என்றும் இல்லாதவாறு இவ்வருடம் வீதிகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. மாணவர்கள், வியாபரிகள், கூலித்தொழிலாளிகள், பிரயாணிகள் எனபலர் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பலமுறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளன. நாம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளோம். தரமற்ற கிறவலினால் வீதிகள் புதிதாக அமைக்கப்பட்டமையே இதற்கு காரணம் அதிகாரிகள் தெரிவித்தார்.
இருந்த போதிலும் களுவாஞ்சிகுடி கிராம மக்கள் உள்ளுரிலும் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையினைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள வீதிகளை இனம் கண்டு தற்காலிகமாகவேனும் விதிகளை துரிதமாக செப்பனிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் களுவாஞ்சிகுடி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் கே.ஜி.கிருபைராஜா மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment